மும்பை: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் விமானப்படை மூலமாக 625 டன் எடை கொண்ட புதிய ரூபாய் நோட்டுக்கள் எடுத்து செல்லப்பட்டதாக முன்னாள் விமானப்படை தளபதி தனோவா தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அரசு கருவூலங்க ளுக்கு இந்தப் பணம் வழங்கப்பட்டது என்றார்.
“நாங்கள் எத்தனை கோடி ரூபாயை எடுத்துச் சென்றோம் என்பது தெரியாது. ஆனால் 625 டன் எடை அளவுள்ள ரூபாய் நோட்டுக்களை விமானப்படை விமானங்கள் எடுத்து சென்றன,” என்றார் தனோவா.