சபரிமலை: தமிழக அய்யப்ப பக்தர் ஒருவர் சபரி மலையில் யானை மிதித்து பலியானார். கோவையைச் சேர்ந்த 58 வயதான பத்ரப்பா என்ற அந்த பக்தர், 13 பேர் அடங்கிய குழுவுடன் சபரிமலை சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு பெருவழிப் பாதையில் அவர்கள் தங்கியிருந்தனர். இந்நிலையில் அதிகாலை வேளையில் திடீரென அங்கு யானைக்கூட்டம் வந்தது. அவற்றைக் கண்டு பக்தர்கள் ஓட்டம் பிடித்தனர். எனினும் பத்ரப்பா யானைக் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார்.
யானை மிதித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.