பிப்ரவரி 8ல் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைக்கு எதிர்வரும் பிப்ரவரி 8ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை 11ஆம் தேதி நடைபெறும்.

நேற்று செய்தியாளர்கள் மத்தியில் இதை அறிவித்தார் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து நான்கு கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், நடப்பு ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி, டெல்லியில் மொத்தம் 1.46 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்றும் சுனில் அரோரா தெரிவித்தார்.

தேர்தல் பணிக்காக 90 ஆயிரம் அலுவலர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மொத்தம் 13 ஆயிரம் மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றார். இதையடுத்து அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

டெல்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றியை ஈட்டியது. மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்ற நிலையில், மூன்று இடங்களை பாஜக கைப்பற்றியது. காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் படுதோல்வி கண்டன.

கடந்த தேர்தலில் பாஜக 32.3 விழுக்காடு வாக்குகளையும், ஆம் ஆத்மி 54.3 விழுக்காடு வாக்குகளையும் பெற்றன. காங்கிரசால் 9.7% வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற தெம்புடன் இம்முறை களமிறங்குகிறது பாஜக. அதே சமயம் அண்மையில் சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

எனவே டெல்லி தேர்தலில் வெற்றி பெற, அக்கட்சி மிகக் கவனமாக வியூகம் அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாமல் போனதால், டெல்லியில் எத்தகைய பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என்பதில் பாஜக தலைமை முனைப்பாக உள்ளது.

ஆட்சியின் கடைசிக் கட்டத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு மக்கள் மனதைக் கவர முயற்சித்துள்ளது ஆம் ஆத்மி.

மெட்ரோ ரயில், பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்று தொடங்கி, ஆம் ஆத்மி கட்சியினர் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளைக் கடந்த சில மாதங்களாகவே வெளியிட்டு வந்தனர்.

காங்கிரசைப் பொறுத்தவரை குடியுரிமை திருத்தச் சட்டம், டெல்லியில் பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் ஆகியவற்றை கையில் எடுக்க தீர்மானித்துள்ளது.

இதனால் டெல்லி தேர்தல் களத்தில் அனல் பறக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 14ஆம் தேதி துவங்குகிறது. 21ஆம் தேதியுடன் வேட்பு மனுத்தாக்கல் முடிவுக்கு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!