நிர்பயா பாலியல் குற்றவாளிகளுக்கு ஜனவரி 22ல் மரண தண்டனை

நிர்பயா பாலியல் குற்றவாளிகளுக்கு ஜனவரி 22ல் மரண தண்டனை

1 mins read
a6655631-4255-4e81-80c9-8a306a81a479
ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு நால்வரும் தூக்கிலிடப்படுகிறார்கள். மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவை நிர்பயாவின் தாயார் வரவேற்றுள்ளார். படம்: இந்திய ஊடகம் -

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைக்கான உத்தரவை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது.

ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு நால்வரும் தூக்கிலிடப்படுகிறார்கள். மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவை நிர்பயாவின் தாயார் வரவேற்றுள்ளார். தனது மகளுக்கு நீதி கிடைத்துள்ளதாகவும் சட்டத்தின் மீது பெண்களுக்கான நம்பிக்கையை இந்த உத்தரவு ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 4 குற்றவாளிகளும் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு நிராகரிக்கப்பட்டால் 4 பேரும் அதிபரிடம் கருணை மனு அளிக்கவும் வாய்ப்பு உள்ளது.

2012 டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியைச் சேர்ந்த 23 வயது மருத்துவ மாணவி தனது நண்பருடன் பேருந்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது அந்த பேருந்துக்குள் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது நண்பரும் தாக்கப்பட்டு இருவருமே சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity