விசாரணைக்கு வராவிட்டால் கார்த்திக்கு எதிராக கைது ஆணை

விசாரணைக்கு வராவிட்டால் கார்த்திக்கு எதிராக கைது ஆணை

1 mins read
5c3cc947-c8ae-482e-bfac-7dee8b804b00
கார்த்தி சிதம்பரம். கோப்புப்படம் -

சென்னை: கடந்த 2015-16 நிதியாண்டில் 7.78 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்ததாகவும் வரிஏய்ப்பு செய்ததாகவும் வருமான வரித்துறையால் குற்றம் சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக்குகளிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மனு தாக்கல் செய்திருந்தனர். சென்னையில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த மனுக்களை நேற்று தள்ளுபடி செய்தது. அத்துடன், அடுத்த விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் முன்னிலையாகாவிட்டால் அவருக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வழக்கு வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.