மும்பை: ஹாங்காங்கிற்கு 1,038 கோடி ரூபாய் கறுப்புப் பணம் அனுப்பியதாக 48 நிறுவனங்கள், மூன்று தனி மனிதர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவுசெய்துள்ளது. பாங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய வங்கிகளில் முகமது இப்ராஹிம்சா ஜானி, ஜிந்தா மிதர், நிஜாமுதின் ஆகிய மூவரும் 2014-2015ஆம் ஆண்டில் போலி ஆவணங்களைக் காட்டி 51 நடப்புக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். அதில் 24 கணக்குகளில் இருந்து ஹாங்காங்குக்கு 488.39 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 27 கணக்குகளிலிருந்து 549.95 கோடி ரூபாய் பணம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மூன்று பேர் மீதும் 48 நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
ஹாங்காங்குக்கு ரூ.1,038 கோடி கறுப்புப் பணம் அனுப்பிய நிறுவனங்கள்
1 mins read

