சாதனைகளை பட்டியலிட்டார் முதல்வர் கெஜ்ரிவால்

சாதனைகளை பட்டியலிட்டார் முதல்வர் கெஜ்ரிவால்

1 mins read

புதுடெல்லி: ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் டெல்லி அரசின் வரி வருவாய் இருமடங்காகி உள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

முந்தைய ஆட்சியில் ரூ.30 ஆயிரம் கோடியாக இருந்த வரி வருவாய் தற்போது ரூ.60 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது என செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தமது அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களை அவர் பட்டியலிட்டார். குறிப்பாக தனியார் பள்ளிகளைவிட டெல்லியில் அரசுப் பள்ளி கள் சிறப்பாக இருப்பதாக கெஜ்ரிவால் கூறினார்.

"இந்த வரி வருவாய் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. இது நேர்மையான ஆட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரம்.

"கல்வித்துறையில் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் டெல்லியில் 450 சுகாதார மையங்கள் அமைக்கப்பட் டன. டெல்லியில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடிய போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் தண்ணீர் மாஃபியாக்கள் அட்டகாசம் கட்டுப்படுத்தப்பட்டது," என்றார் கெஜ்ரிவால்.