'கொலையுண்ட 35 பெண்களும் உயிரோடு உள்ளனர்'

'கொலையுண்ட 35 பெண்களும் உயிரோடு உள்ளனர்'

1 mins read
e45497c9-3ccc-46b1-966c-61fd323483e3
பீகாரில் உள்ள முசாபர்பூர் நகர் பெண்கள் காப்பகம் ஒன்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மிகப்பெரிய பாலியல் வன்கொடுமை பற்றிய தகவல் பரபரப்பைக் கிளப்பியது. அதில்  35 பெண்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மகளிர் அமைப்பினரும் மாணவர்களும் கடந்த மாதம் புதுடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: இந்திய ஊடகம் -

முசாபர்பூர்: பீகாரில் உள்ள முசாபர்பூர் நகர் பெண்கள் காப்பகம் ஒன்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மிகப்பெரிய பாலியல் வன்கொடுமை பற்றிய தகவல் பரபரப்பைக் கிளப்பியது. அதில் 35 பெண்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அரசியல் செல்வாக்கு மிகுந்த காப்பக உரிமையாளர் பிர்ஜேஷ் தாக்கூர் மற்றும் அவரது கூட்டாளிகள் 11 பெண்களைக் கொலை செய்திருப்பார்கள் என்றுகூட சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது.

ஆனால் அச்சம்பவத்தில் திடீர் திருப்பமாக, கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட பெண்கள் உயிருடன் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இப்போது தெரிவித்துள்ளது.