சுடச் சுடச் செய்திகள்

உலக அளவில் முதலிடம் பிடித்த கேரள நகரம்

உலகில் மக்கள்தொகையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம் நகரம்தான் மிக வேகமாக வளர்ந்துவரும் நகரம் என்று ஐநா சபையின் 'தி எக்னாமிஸ்ட்' என்ற வார இதழ் தெரிவிக்கிறது.

மக்கள்தொகை கிடுகிடுவென அதிகரிக்கும் உலக நகர்களில் கேரளாவின் கோழிக்கோடு நான்காவது இடத்திலும் கொல்லம் 10வது இடத்திலும் இருக்கின்றன. 

முதலிடத்தைப் பிடித்துள்ள மலப்புரத்தில் 2015 முதல் 2020-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் மக்கள் தொகை 44 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கோழிக்கோடு 34.5 சதவிகித வளர்ச்சி விகிதத்தையும் கொல்லம் 31.1 வளர்ச்சி விகிதத்தையும் எட்டியுள்ளன. இந்தப் பட்டியலில், கேரளாவின் பண்பாட்டுத் தலைநகராகக் கருதப்படும் திருச்சூருக்கு 13-வது இடம் கிடைத்துள்ளது.

வியட்னாம், சீனா, ஐக்கிய அரபு சிற்றரசு, ஓமன் நாடுகளில் உள்ள இதர நகர்களும் இதே இடங்களில் உள்ளன.

கேரளாவின் திரிச்சூர் நகரம் 13வது இடத்தில் உள்ளது. சூரத் 27வது இடத்திலும் திருப்பூர் 30வது இடத்திலும் உள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த  திருப்பூருக்கு 30வது இடம் கிடைத்துள்ளது. 

#கேரளா# மக்கள்தொகை#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon