ராகுல்: பணக்காரர்கள் மீதே மோடிக்கு அக்கறை

ராகுல்: பணக்காரர்கள் மீதே மோடிக்கு அக்கறை

1 mins read

புதுடெல்லி: பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதற்கான ஆலோசனையில் பிரதமர் மோடி மிகுந்த தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டார். அதில், ''பிரதமர் மோடி மத்திய பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவது பணக்காரர்கள் மற்றும் தனது முதலாளித்துவ நண்பர்களுக்காகத்தான். விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், நடுத்தர வர்க்கத்தினர் பற்றி அவருக்கு எந்தக் கவலையும் இல்லை," என கூறியுள்ளார்.