பாட்னா: பீகார் மாநிலம் ராஜ்கிர் மாவட்டத்திலுள்ள மத்திய ஆயுதப்படை போலிஸ் பயிற்சி மையத்தில் டிஐஜியாக பணிபுரிந்து வருபவர்
டி.கே.திரிபாதி. கடந்த புதன்கிழமை பயிற்சி மைய உணவகத்திற்குச் சென்ற அவர், பணியில் இருந்த அமோல் காரத் என்னும் காவலரிடம் வெந்நீர் எடுத்து வரச் சொல்லியிருக்கிறார். அப்போது அவர் பிளாஸ்க்கில் இருந்த வெந்நீரை அவருக்கு ஊற்றிக் கொடுத்திருக்கிறார்.
வெந்நீர் சூடாக இருப்பதை கவனிக்காமல் டிஐஜி தமது வாயில் ஊற்றிக்கொண்டதால் அவரது வாய் வெந்தது. இதனால் கோபமடைந்த திரிபாதி, காரத்தை அழைத்துத் திட்டினார். அத்துடன் வெந்நீரை காரத் முகத்தில் வீசியுள்ளார்.
இதனால் முகம் வெந்த காரத்தை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து திரிபாதியிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
போலிசார்் இடையே ஏற்பட்ட இந்த மோதல் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

