பாகிஸ்தான், சீனாவுக்குப் போட்டியாக அரபிக் கடலில் இந்திய போர்க் கப்பல்

பாகிஸ்தான், சீனாவுக்குப் போட்டியாக அரபிக் கடலில் இந்திய போர்க் கப்பல்

2 mins read
ae6641a6-d09d-44f4-94b0-d6a15a3dff88
அரபிக் கடலில் இந்திய கடற்படை நிறுத்தி வைத்துள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பல். கோப்புப் படம்: ஏஎஃப்பி -

புதுடெல்லி: பாகிஸ்தானும் சீனாவும் கடந்த ஒன்பது நாட்களாக கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடு பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்தியா, விமானம் தாங்கி கப்பலான 'ஐஎன்எஸ்' விக்ரமாதித்யாவை அரபிக் கடலில் நிறுத்தி வைத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பே அரபிக்கடலில் நிறுத்தப்பட்ட ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பலில் கடற்படை தலைமைய கத்தின் அதிகாரிகளும் இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

சென்ற திங்கட்கிழமை அரபிக் கடலின் வடக்குப் பகுதியில் பாகிஸ்தானும் சீனாவும் ஒன்பது நாள் கூட்டு ராணுவப் பயிற்சியை தொடங்கின.

இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம் படுத்தும் நோக்கில் இந்த ராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

பயிற்சியில் நீா்மூழ்கிக் கப்பல்கள், எதிரி நாட்டு கப்பல்களை அழிக்கும் கப்பல்கள், பீரங்கி தாங்கி கப்பல்கள் போன்றவற்றை இரு நாடுளும் பயன்படுத்தி வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில் இந்தியப் போா்க் கப்பல் அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய கடற்படை செய்தித் தொடா்பாளா், "ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலின் செயல்பாடுகளை கடற்படை துணைத் தலைவா் எம்.எஸ்.பவாா் ஆய்வு செய்தாா். இந்தப் போா்க்கப்பல் எப்போதும் போரில் வெற்றி பெறும்," என்றாா்.

அரபிக் கடலின் வடக்குப் பிராந்திய பகுதியில் பாகிஸ்தானின் குவாடா் துறைமுகத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.

சீனா-பாகிஸ்தான் இடையே சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம் வரை அமைக்கப்பட்டுவரும் 60 பில்லியன் அமெரிக்க டாலா்கள் மதிப்பிலான பொருளாதார வழித்தடத்தையும் குவாடா் இணைக்கிறது. இந்தியப் பெருங்கடலுக்கு நுழைவாயிலாக அரபிக் கடல் திகழ்கிறது.

இதற்கிடையே இந்தியாவின் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்குள் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் அத்துமீறி நுழைய முயன்ற சீன கடற்படை கப்பலை இந்திய கடற்படை இடைமறித்து திருப்பி அனுப்பியது.