புதுடெல்லி: இந்தியாவில் சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டம் நாடு முழுவதும் நேற்று முன் தினம் அமலானது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரு கின்றன. இதனால் பல்வேறு இடங் களில் வன்முறை மூண்டது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குடியுரிமை சட்டத்தை உடனே அமல் படுத்தும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி இந்து தர்ம பரிஷத் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குடியுரிமை சட்டத்தை உடனே அனைத்து மாநிலங்களிலும் அமல் படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதற்கிைடயே குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்த குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று அரசிதழில் அரசு வெளியிட்டது.
இதையடுத்து அந்த சட்டம் நேற்று முன்தினம் அமலானது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையி னருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்தச் சட்டம் வகை செய்கிறது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

