கணவர் பல் துலக்குவதில்லை என மனைவி மணவிலக்கு மனு

கணவர் பல் துலக்குவதில்லை என மனைவி மணவிலக்கு மனு

1 mins read
9bf98109-95fd-45d2-82de-90cd3d985cdb
-

தன் கணவர் பல் துலக்குவதுகூட கிடையாது என்று சொல்லி ஒரு மாது மணவிலக்குக் கேட்டு மனு செய்து இருக்கிறார்.

பீகாரில் உள்ள வைஷாலி என்ற மாவட்டத்தைச் சேர்ந்த சோனி தேவி என்பவருக்கும் மணிஷ் ராம் என்பவருக்கும் 2017ல் திருமணம் நடந்தது.

திருமணம் நடந்து இரண்டு ஆண்டு காலத்தில் ஒரு நாள் கூட தன்னுடைய கணவர் ஒழுங்காகக் குளித்ததில்லை, பல் துலக்கியதில்லை என்று தன்னுடைய மணவிலக்கு மனுவில் அந்த மனைவி குறிப்பிட்டு இருக்கிறார்.

பீகார் மாநில பெண்கள் ஆணையத்தில் அந்த மணவிலக்கு மனுத் தாக்கலாகி இருக்கிறது. தன் கணவர் சவரம் கூட செய்வதில்லை என்றும் பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது தன் கணவருக்கு அறவே தெரியவில்லை என்றும் மனுவில் மனைவி புகார் தெரிவித்து உள்ளார்.

மனுவை விசாரித்த ஆணையம், கணவர்-மனைவி இருவரிடமும் விளக்கம் கேட்டு உள்ளது. 60 நாட்களில் பழக்கவழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கணவரிடம் ஆணையம் வலியுறுத்திக் கூறி இருக்கிறது.

#தமிழ்முரசு