கடுங்குளிராலும் பனிமூட்டத்தாலும் தவிக்கும் வடமாநிலங்கள்

வடஇந்திய மாநிலங்களில் கடுங்குளிருடன் பனிமூட்டம் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்றுக் காலை 8 டிகிரி செல்சியசுக்கு வெப்பநிலை பதிவானது. கடுமையான பனிமூட்டம் நிலவுவதன் காரணமாக ரயில் தண்டவாளங்களில் உள்ள சமிக்ஞை விளக்குகள் தெளிவாகத் தெரியவில்லை. இதன் காரணமாக டெல்லியில் மட்டும் நேற்று 15 விரைவு ரயில் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்குக் கடும் பனிமூட்டமும் ஜம்மு-காஷ்மீர், இமாச்சல் பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவும் இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. (படத்தில்) ஸ்ரீநகரில் தால் ஏரியின் கரையோரத்தில் பனியால் மூடப்பட்டுள்ள நடைப்பாலத்தில் செல்லும் மக்கள். படம்: ஏஎஃப்பி