கடும்பனியிலும் கர்ப்பிணியை 4 மணி நேரம் சுமந்து சென்ற வீரர்கள்

காஷ்மீரில் தற்போது கடும் பனிப்பொழிவு நீடித்து வருகிறது.

இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷமீனா என்ற பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து நூறு ராணுவ வீரர்களும், முப்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் அப்பெண்ணை சுமார் நான்கு மணி நேரம் மாறிமாறி, சுமந்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சுகப்பிரவசம் ஆனது.

ராணுவ வீரர்களையும், உதவிக்கரம் நீட்டிய பொதுமக்களையும் பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.

#ராணுவவீரர்கள் #காஷ்மீர் #தமிழ்முரசு