இந்தியாவில் பஞ்சாயத்து தலைவியான பாகிஸ்தானில் பிறந்த பெண்

இந்தியாவில் பஞ்சாயத்து தலைவியான பாகிஸ்தானில் பிறந்த பெண்

1 mins read
6afbd159-7a63-49b8-bd54-a4bc9c6e89cd
இந்தியக் குடியுரிமை பெற்றுள்ள பாகிஸ்தான் பெண்மணி 36 வயதான நீத்தா கன்வார் ராஜஸ்தானில் உள்ளாட்சிப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். படம்: ஊடகம் -

ஜெய்ப்பூர்: இந்தியக் குடியுரிமை பெற்றுள்ள பாகிஸ்தான் பெண்மணி ஒருவர் ராஜஸ்தானில் உள்ளாட்சிப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த 36 வயதான நீத்தா கன்வார் இந்தியாவில் உயர்கல்வி பெற்றவர். கடந்த 2011ஆம் ஆண்டு ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து இந்தியாவி லேயே நிரந்தரமாகக் குடியே றிய அவருக்கு கடந்தாண்டு இந்தியக் குடியுரிமை கிடைத்தது. இதையடுத்து ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கினார் நீத்தா.

டோங்க் மாவட்டத்தில் உள்ள நட்படா கிராம பஞ்சா யத்தின் தலைவி பதவிக்குப் போட்டியிட்டார் நீத்தா. இதில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை 362 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டார் நீத்தா.

தன்னை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், பஞ்சாயத்து தலைவியாக நேர்மையாகவும் நியாயமாகவும் செயல்படப் போவதாக உறுதியளித்துள்ளார்.