மும்பை: மும்பையில் நேற்று முன்தினம் நெட்டோட்டப் போட்டி நடைபெற்றது. அதில் திரைப்பட பிரபலங்கள், தொழிலதிபர்கள், தனியார் மற்றம் அரசு ஊழியர்கள் என ஏறக்குறைய 55,000 பேர் கலந்துகொண்டனர்.
இந்தியருக்கான பெண்கள் பிரிவில் பங்குபெற்று ஓடிய இந்திய ஒலிம்பிக் தடகள வீராங்கனையான சுதா சிங், இந்த ஆண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 2018, 2019 ஆகிய ஆண்டுகளிலும் கலந்துகொண்டு முதல் இடத்தைப் பிடித்தார். கடந்த ஆண்டில் அவர் 02:34:56 நிமிட சாதனை நேரத்தில் ஓட்டத்தை முடித்தார். இந்த ஆண்டு கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 நிமிடம் தாமதமாக முடித்தார்.
பெண்கள் பிரிவில் சுதா சிங் முதல் இடமும், சோதிக் காவதே 2-ம் இடமும், ஷியாம்லி சிங் 3வது இடமும் பிடித்தனர்.
42 கிலோ மீட்டர் தூர முழு நெட்டோட்டப் போட்டி ஆண்கள் பிரிவில் சிருனு புகதா முதலிடம் பிடித்தார். ஷெர்சிங் 2வது இடத்தையும் துர்க்கா பகதூர் புதா 3வது இடத்தையும் பிடித்தனர்.
அனைத்துலக அளவிலான போட்டியின் ஆண்கள் பிரிவில் தேராரா குரிசா முதல் இடமும், ஆயிலே அப்சரே 2-வது இடமும், பிரகனு தேஷோம் 3வது இடமும் பிடித்தனர்.

