பாரம்பரிய கார் கண்காட்சி

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் பாரம்பரிய கார் கண்காட்சி நடந்தது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

புதுச்சேரி அரசு சுற்றுலாத் துறை, சென்னை ஹெரிட்டேஜ் மோட்டார்ஸ் கிளப் ஆகியவை இணைந்து கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் பாரம்பரிய கார்களின் அணிவகுப்பு கண்காட்சி நடத்துகின்றன. அதன்படி இந்த ஆண்டும் கார் கண்காட்சி கடற்கரை சாலையில் (படம்) நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் சென்னை, புதுச்சேரியில் இருந்து 72 பாரம்பரிய வாகனங்கள், 25 மோட்டார் சைக்கிள்கள் பொதுமக்களின் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியில் ‘ஆஸ்டின்’ (1927 ஆம் ஆண்டு), ‘டாட்ஜ்’ (1933), ‘மோரிஸ்’ (1935), ‘ஜாகுவார்’ (1936) ‘சிட்ரன்’ (1946), ‘சிங்கர்’ (1947), ‘பேர்ட் முஸ்டாங்’ (1967), ‘வி டபிள்யூ பீட்டில்’ (1966), ‘மோரிஸ் மைனர் 1000’ உள்ளிட்ட வாகனங்கள் காட்சிக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்தக் கார்களின் அருகே அதன் உரிமையாளர் பெயர், கார் தயாரிக்கப்பட்ட ஆண்டு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதேபோல் பழங்கால மோட்டார் சைக்கிள்களும் விதவிதமான மாடல்களில் பொதுமக்களின் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!