சென்னைக்கு வந்துசெல்லும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு

சென்னைக்கு வந்துசெல்லும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு

1 mins read
ee11c3e9-5ef9-4c8b-96ed-2342d8c1922f
சென்னை விமான நிலையத்துக்கு வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதிரி படம்: இணையம் -

சென்னை விமான நிலையத்துக்கு வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சா் க.பாண்டியராஜனுக்கு மத்திய அமைச்சா் ஹா்தீப் புரி தகவல் தெரிவித்துள்ளாா்.

சென்னையிலிருந்து புறப்படும் பல அனைத்துலக விமானங்களில் தமிழில் அறிவிப்பு இருப்பதாகவும் இந்திய விமான நிறுவனங்கள் தமிழில் அறிவிப்பதில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டு வந்தது.

இதற்கிடையே தமிழகத்துக்கு வந்து செல்லும் விமா னங்களில் அறிவிப்புகளைத் தமிழில் கூற தீவிரமாக யோசித்து வருவதாக பிரதமா் மோடி தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடா்ந்து, சென்னை வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழ்வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் மத்திய அரசிடம் வலியுறுத்தியிருந்தாா்.

#தமிழ்முரசு #சென்னை #விமானநிலையம் #தமிழில்அறிவிப்பு

குறிப்புச் சொற்கள்