சுடச் சுடச் செய்திகள்

மங்களூர் விமான நிலையத்தில்  வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

மங்களூர்: கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே பஜ்பேவில் அனைத்துலக விமான நிலையம் உள்ளது. இங்கு நுழைவுச்சீட்டு வழங்குமிடத்தின் அருகே வாகன நிறுத்தத்தில் ஒரு பை கவனிப்பாரற்றுக் கிடந்தது. அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் விமான நிலையத்துக்கு விரைந்து வந்து அந்தப் பையைக் கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அதில் மூன்று வெடிகுண்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் விமான நிலையம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டுகள் இருந்த பையை விமான நிலையத்தில் இருந்து வெகு தூரத்தில் உள்ள திடலுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு வைத்து வெடிகுண்டுகளை நிபுணர்கள் செயலிழக்க வைத்தனர். கண்காணிப்புக் கருவியில் பதிவானவற்றை வைத்து போலிசார் குண்டுவைத்தவரைத் தேடி வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon