பொருளியல் வளர்ச்சி மதிப்பீடு 4.8%ஆகக் குறைந்துள்ளது

பொருளியல் வளர்ச்சி மதிப்பீடு 4.8%ஆகக் குறைந்துள்ளது

1 mins read

புதுடெல்லி: ஐஎம்எப் என்றழைக்கப்படும் அனைத்துலக பண நிதியம் இந்தியாவின் நிதியாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி குறித்த முந்தைய மதிப்பீடு 6.1 விழுக்காட்டில் இருந்து 4.8 விழுக்காடாகக் குறைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளியல் அமைப்பின் உச்ச மாநாடு நடைபெற்று வரும் நிலையில், பொருளியல் வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை ஐஎம்எப் வெளியிட்டது. அதில், நடப்பு நிதியாண்டில் உலகின் பொருளியல் வளர்ச்சி விகிதம் 2.9 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இது ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்ததைவிடக் குறைவானதாகும், இதேபோல், இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டில் 4.8 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த வளர்ச்சி விகிதம் 6.1 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. 2020-21 ஆம் ஆண்டில் 5.8% ஆகவும், 2021-22 ஆம் ஆண்டில் 6.5% ஆகவும் முன்னேற்றம் காணப்படுகிறது.

இந்தியா மற்றும் பிற வளர்ந்து வரும் சந்தைகளின் மந்த நிலை காரணமாக அதன் 2020 உலகளாவிய வளர்ச்சிக் கணிப்புகளை முந்தைய மதிப்பீட்டில் 3.4 விழுக்காட்டில் இருந்து 3.3 விழுக்காடாகக் குறைத்துள்ளது.