மனவளர்ச்சி குன்றிய மகளைச் சீரழித்து, கர்ப்பிணியாக்கி, கொலை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை

மனவளர்ச்சி குன்றிய மகளைச் சீரழித்து, கர்ப்பிணியாக்கி, கொலை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை

2 mins read
12b23714-e46b-408f-93f3-530d8310e19b
 போலிசார் அந்தப் பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததில் அவர் 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. கோப்புப்படம் -

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் கோடா அருகே உள்ள நயபுரா பகுதியைச் சேர்ந்த, மனவளர்ச்சி குன்றிய 17 வயது இளம்பெண் கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி அவரது வீட்டிலேயே படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அவர் கொலைசெய்யப்பட்ட அன்று, நயபுரா காவல் நிலையத்துக்குச் சென்ற அந்தப் பெண்ணின் தந்தை, தாம் வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியபோது தம் மகள் இறந்துகிடந்ததாகச் சொல்லி புகாரைப் பதிவு செய்தார். அவர் பாதுகாவலராகப் பணியாற்றி வந்தார்.

போலிசார் அந்தப் பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததில் அவர் 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து நடந்த விசாரணையில் அவரை கற்பழித்து கொலை செய்தது அவரது தந்தைதான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயிடம் நடத்திய விசாரணையில் தனது கணவர் நீண்ட காலமாக மகளை கற்பழித்ததாக வாக்கு மூலம் அளித்தார்.

இதையடுத்து, கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தையை போலிசார் கைது செய்தனர்.

மரபணு பரிசோதனையிலும் அவர்தான் குற்றவாளி என்பது உறுதியானது.

இந்த வழக்கு கோடா போஸ்கோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணையின் முடிவில், இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த 45 வயது தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி அசோக் சவுத்ரி தீர்ப்பளித்தார்.

நீதிபதி தனது தீர்ப்பில் இந்த குற்றம் மனித சமுதாயத்திற்கு எதிரான, மிகவும் கொடூரமான மற்றும் வெட்கக்கேடானது என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தூக்கு தண்டனையுடன் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

#தமிழ்முரசு #கற்பழித்துகொலை #கர்ப்பிணி #தூக்கு

குறிப்புச் சொற்கள்