பெங்களூரில் சட்டவிரோதக் குடியேறிகள் என அசாம் மக்களின் வீடுகள் இடிப்பு

பெங்களூர்: மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசு குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்தியுள்ளது. இந்தச் சட்டம், பாகிஸ்தான், பங்ளாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை மட்டும் வெளியேற்ற கொண்டுவரப்பட்டதாகக் கூறி இஸ்லாமியர்களை வெளியேற்ற முயன்று வருகிறது.

இந்நிலையில் மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கேரளா, மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் எனக் கூறி வரும் நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்தச் சட்டத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

அப்படி பெங்களூருவின் வடக்குப் பகுதியில் உள்ள அக்ரஹாரா பகுதியில் ஏராளமானோர் பங்ளாதேஷை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியதாகவும் அப்பகுதி பாஜக எம்எல்ஏ அர்விந்த் லிம்பாவள்ளி குற்றம்சாட்டி வந்தார்.

இதனையடுத்து அவரது புகாரை முறையாக விசாரிக்காமல், வடக்குப் பெங்களூரு பகுதியில் உள்ளவர்கள் பங்ளாதேஷை சேர்ந்தவர்கள் என்று அக்ரஹாரம் பகுதியில் மக்கள் வசிக்கும் பலரது வீடுகளுக்கான மின்சாரம், குடிநீர் இணைப்பைத் துண்டித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, அப்பகுதியில் இருந்த 100க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கியது அரசு.

மேலும் அங்கிருந்தவர்களைக் கர்நாடகாவை விட்டு வெளியேறும்படியும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக அக்ரஹாரா பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “எங்கள் மத அடையாளங்களை வைத்துப் பங்ளாதேஷை சேர்ந்தவர்கள் என்று விரட்டுகிறார்கள். நாங்கள் இந்தியர்கள். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.

மேலும் வீடுகளை இடிப்பது தொடர்பான எந்த அறிவிப்பையும் முன்பே வெளியிடவில்லை. எங்களுக்கு வாழ ஓர் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வேலைக்காக இங்கு வந்துள்ளோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

அவர்கள் எல்லோரும் அஸ்ஸாமில் இருந்து வந்த இந்தியர்கள் என்பதற்கு ஆதாரமாக அஸ்ஸாம் என்ஆர்சி பட்டியலில் அவர்கள் பெயரும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!