நிர்பயா குற்றவாளிகளுக்கு 'தூரத்தில் தூக்குக் கயிறு'

நிர்பயா பாலியல் கொடூர வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் நான்கு கைதிகளின் பாதுகாப்புக்கு ஒவ்வொரு நாளும் ரூ.50,000 செலவிடப்படுவதாக திகார் சிறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மரண தண்டனைக்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது முதல் அவர்களுக்கான செலவு அதிகரித்து இருப்பதாக அது குறிப்பிட்டு உள்ளது. ஒவ்வொரு கைதியை ஷிஃப்ட் முறையில் இரு காவலர்கள் பாதுகாத்து வருகிறார்கள்.

வினய் சர்மா, 26, அக்‌ஷய் குமார் சிங், 31, முகேஷ் குமார் சிங், 32, பவன், 26, ஆகியோருக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் நால்வரும் எந்தப் பதற்றமும் இன்றி எப்போதும்போல இருப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவர்களைப் பரிசோதிக்க மருத்துவர்களும் வியப்பைத் தெரிவித்து உள்ளனர்.

வழக்கமாக, மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் கைதிகளிடம் காணப்படும் பதற்றம், மன அழுத்தம், பீதி, பயம் உள்ளிட்ட எந்த உணர்ச்சியும் இந்த நான்கு கைதிகளிடமும் இல்லை என்கின்றனர் திகார் சிறை மருத்துவர்கள்.

நால்வரும் சிறை எண்.3ல் தனித் தனியாக அடைக்கப்பட்டு இருந்தபோதிலும் தினமும் அரை மணி நேரம் சிறைக்கூண்டை விட்டு வெளியில் விட அனுமதிக்கப்படும்போது அவர்கள் சைகை முறையில் பேசுவதை அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.

சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி மரண தண்டனையை மேலும் தள்ளிப்போடுவதற்கான திட்டங்களில் அவர்கள் இருக்கலாம் எனவும் வினய், அக்‌ஷய் ஆகிய இருவரும் கடைசி நேரத்தில் மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்யக்கூடும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

கடைசி ஆசை என்ன என்று திகார் சிறை நிர்வாகம் கேட்ட கேள்விக்கு நால்வரும் இன்னும் பதிலளிக்கவில்லை.

தூக்குமேடையிலிருந்து தப்பிவிடுவோம் என்ற நம்பிக்கை காரணமாக அவர்கள் மௌனம் காக்கக்கூடும் என கூறப்படுகிறது. மரண தண்டனை யை ஆயுள் தண்டனையாக மாற்ற இந்த நான்கு கைதிகளின் வழக்கறிஞர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்த நால்வரின் கல்வித்தகுதி விவரங்கள் வெளி யிடப்பட்டுள்ளன. முகேஷ், பவன், அக்‌ஷய் ஆகிய மூவரும் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதியபோதிலும் அதில் தேர்ச்சி பெறவில்லை. அதேபோல பட்டப்படிப் பில் சேர்ந்த வினய் அதனை முடிக்க வில்லை.

#தமிழ்முரசு #நிர்பயா #குற்றவாளிகள் #தூக்கு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!