கிணற்றுக்குள் பாய்ந்த பேருந்து; 26 பேர் பலி

கிணற்றுக்குள் பாய்ந்த பேருந்து; 26 பேர் பலி

1 mins read
60bfb25b-9bdc-4d4a-9f77-cf7187fadd8d
கிணற்றுக்குள் விழுந்த பேருந்து. படங்கள்: ஏஎஃப்பி -
multi-img1 of 3

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம், மாலேகான் டியோலா சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தும் ஆட்டோரிக்ஷாவும் நேற்று (ஜனவரி 28) மோதிக்கொண்டன.

மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களும் சாலையோரம் உள்ள கிணற்றில் விழுந்தன. மேஷி காட் அருகே நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களும் மீட்பு பணிக்கு உதவினர்.

பேருந்து கிணற்றுக்குள் தலைகீழாக விழுந்ததால் பயணிகள் பலர் தண்ணீரில் மூழ்கினர்.

ஏழு வயது சிறுமி உட்பட 26 பேரின் உயிர்களைப் பலிகொண்ட கோர விபத்தில் சிக்கியவர்களை மீட்க அதிகாரிகள் இரவு முழுவதும் வேலை பார்த்தனர்.

32 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பேருந்து ஓட்டுநரும் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

#மும்பைபேருந்துவிபத்து #தமிழ்முரசு #கிணற்றுக்குள்பேருந்து

குறிப்புச் சொற்கள்