ஏழு வயது சிறுமி உட்பட 26 பேரின் உயிர்களைப் பலிகொண்ட கோர விபத்து ஒன்று, நேற்று முன்தினம் மும்பையில் நேர்ந்தது.
பயணிப் பேருந்து ஆட்டோரிக்ஷாவுடன் மோதியதில் பேருந்து கிணற்றுக்குள் விழுந்தது.
பேருந்தில் சிக்கியிருந்தோரை மீட்க அதிகாரிகள் இரவு முழுவதும் வேலை பார்த்தனர். 32 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இறந்தோரில் பேருந்து ஓட்டுநரும் அடங்குவார். இச்சம்பவம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.
படம்: ஏஎஃப்பி

