புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அத்துடன் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22ம் தேதியுடன் முடிவடைகிறது.
எனவே, 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி 8ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் முடிவுகள் வருகிற பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

