கிரண்பேடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கிரண்பேடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

1 mins read
2a59a309-bfed-408a-bf84-8b3200518c35
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. கோப்புப்படம்: ஊடகம் -

புதுச்சேரி: மாநிலத் தேர்தல் ஆணையர் பாலகிரு‌‌ஷ்ணனின் நியமனத்தை ரத்து செய்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவித்து அதை ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரி உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பதில் அளிக்குமாறு கிரண்பேடிக்கு உத்தரவிட்டுள்ளது.