குடமுழுக்கு தகவலுக்கு 'நம்ம தஞ்சை' செயலி

குடமுழுக்கு தகவலுக்கு 'நம்ம தஞ்சை' செயலி

1 mins read
b3546abf-c889-46c5-893d-16ee9258bc3d
உலகம் வியக்கும் தமிழர்களின் அடையாளமாக எழுந்து நிற்கும் தஞ்சை பெருவுடையார் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா பிப்ரவரி 5ல் நடக்கிறது. அதையொட்டி கோயிலில் முழு அளவில் திருப்பணி நடந்துள்ளது. படம்: ஊடகம் -

தஞ்சை: தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 5ஆம் தேதி நடப்பதை முன்னிட்டு அங்கு மிகப்பிரம்மாண்ட அளவில் பலதரப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலர் கே. சண்முகம் அறிவித்தார்.

குடமுழுக்கு, பெரியகோயில், தஞ்சை பற்றிய தகவல்கள், கோயிலுக்குச் செல்லும் வழிகள், அன்னதானம், வாகன நிறுத்திவைப்பு இடங்கள் உள்ளிட்ட எல்லா சிறப்பு ஏற்பாடுகள், இதர பல விவரங்களை உள்ளடக்கிய 'நம்ம தஞ்சை' என்ற செயலி உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.

அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து எல்லாரும் பயன் அடையலாம். அது தஞ்சை வருவோருக்கு வழிகாட்டி உதவும் என்றும் அவர் கூறினார்.