பயங்கரவாதிகள் வீசிய கையெறி குண்டு: ஐந்து வீரர்கள் காயம்

பயங்கரவாதிகள் வீசிய கையெறி குண்டு: ஐந்து வீரர்கள் காயம்

1 mins read
ee2a8b06-dd6f-4fd2-b2cb-09fe30d47c9b
பயங்கரவாதிகள் படையினர் மீது கையெறி குண்டு வீசப்பட்ட இடத்தைப் பார்வையிட்ட ராணுவ அதிகாரிகள். படம்: இபிஏ -

ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்துக்குட்பட்ட லால் சவுக் அருகிலுள்ள பிரதாப் பார்க் பகுதியில் நேற்று பிற்பகல் வழக்கம்போல் மத்திய துணை ராணுவப் படையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சில பயங்கரவாதிகள் படையினர் மீது கையெறி குண்டை வீசிவிட்டு தப்பியோடினர். இந்தத் தாக்குதலில் இரு பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட ஐவர் படுகாயமடைந்தனர். அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலிசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியைச் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதிகளைத் தேடி வருகின்றனர்.