ஆதிச்சநல்லுாரில் ஆய்வுகள் தொடக்கம்

1 mins read

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லுாரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் புதிய வரவுசெலவுத் திட்டத்தில் அறிவித்துள்ள நிலையில், தமிழக தொல்லியல்துறை அலுவலர்கள் அங்கு ஆய்வுப் பணிகளைத் தொடங்கி இருக்கிறார்கள். ஆள் இல்லாத விமானம் மூலம் 114 ஏக்கர் நிலப்பரப்பை படம் எடுத்தனர். அதே பகுதியில் உள்ள சிவகளை கிராமத்திலும் தொல்லியல் அதிகாரிகள் முகாமிட்டு உள்ளனர். படம்: தமிழக ஊடகம்