கயிற்றால் கட்டி இழுத்துச் செல்லப்பட்ட ஆசிரியை

கயிற்றால் கட்டி இழுத்துச் செல்லப்பட்ட ஆசிரியை

1 mins read

கோல்கத்தா: சாலை அமைக்க நிலம் கொடுக்க மறுத்த இரு சகோதரிகளை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவரும், ஆதரவாளர்களும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினாஜ்பூர் மாவட்டம், ஃபடா நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் சாலையமைக்க முடிவாகி உள்ளது.

இதற்காக அங்கு வசிக்கும் சோமா தாஸ் என்ற ஆசிரியைக்குச் சொந்தமான நிலத்தைக் கையகப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கு சோமாதாஸ் ஒப்புக்கொள்ளவில்லை.

இதையடுத்து பஞ்சாயத்து தலைவரும் ஆதரவாளர்களும் சோமா தாசை கீழே தள்ளி, கால்களைக் கட்டி தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். தடுக்க வந்த அவரது சகோதரியும் தாக்கப்பட்டார்.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.