'விசா' வழங்குவதை நிறுத்த இந்திய அரசு முடிவு

'விசா' வழங்குவதை நிறுத்த இந்திய அரசு முடிவு

1 mins read

புதுடெல்லி: நோவல் கொரோனா கிருமி பரவியுள்ள சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வருபவர்களுக்கு விசா வழங்குவதை இந்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

சீன நாட்டினருக்கும் சீனாவில் தங்கியுள்ள பிற நாட்டினருக்கும் 'இ-விசா' வழங்குவது உடனடியாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்று பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது.

அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இந்த நிலையில் கேரளாவில் 3வது ஆளுக்கு கொரோனா கிருமி தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த மாநிலத்தில் கிருமி தொற்றிய இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தமிழகத்தில் கொரோன கிருமி பாதிப்பு இல்லை என்று தமிழக சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோய் தடுப்பு, முன்னெச்சரிக்கை, தொடர் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வகத்தில் நேற்று முன் தினம் நடந்தது.

இதில் பங்கேற்ற பிறகு பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "இதுவரை 5,543 பயணிகளை சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 விமான நிலையங்களில் பரிசோதனை செய்து இருக்கிறோம். அவர்கள் அனைவரும் இயல்பான நிலையில் இருக்கின்றனர்," என்றார்.

சீனாவில் இருந்து வந்த 646 பேர், கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்ட அண்டை நாடுகளில் இருந்து வந்த 153 பேர் என மொத்தம் 799 பேர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரு வதாகவும் அமைச்சர் தெரி வித்தார்.