கொரோனா கிருமித் தொற்று: கேரளாவில் மாநிலப் பேரிடராக அறிவிப்பு

கொரோனா கிருமித் தொற்றை இந்தியாவின் கேரள மாநிலம், மாநிலப் பேரிடராக அறிவித்துள்ளது. கொரோனா கிருமித் தொற்று காரணமாக மூன்று மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கேரளாவில் உள்ள வெவ்வெறு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

“கொரோனா கிருமித் தொற்றை மாநிலப் பேரிடராக அறிவிக்க கேரளா முடிவு செய்துள்ளது,” என்று அம்மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் இன்று (பிப்ரவரி 4) தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

கேரளாவில் கொரோனா கிருமி பரவுவதைத் தடுக்க அனைத்து வளங்களையும் பயன்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கேரள அதிகாரிகள் தெரிவித்தனர். மாநிலப் பேரிடர் அறிவிக்கப்பட்டதை அடுத்து, கேரளாவில் கிருமித் தொற்றுக்கு எதிரான போரில் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவ அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படுவர்.

விடுப்பில் இருக்கும் மருத்துவ அதிகாரிகளும் வேலைக்கு வர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய இந்த கொரோனா கிருமித் தொற்றால் கேரளாவில் மூன்று மாணவர்கள் பாதிப்படைந்தது மருத்துவப் பரிசோதனையின் வழி உறுதி செய்யப்பட்டதும், மாநிலப் பேரிடரை அறிவிக்க கேரளாவின் பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்ததாக கேரள சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மூவரும் வூஹான் நகரிலிருந்து கேரளா திரும்பியவர்கள். தற்போதைய நிலவரப்படி இந்த மூவர் மட்டுமே இந்தியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது உடல்நிலை திருப்தியளிக்கும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சீனாவிலிருந்தும் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிற நாடுகளிலிருந்தும் கேரளா வந்தவர்களில் 84 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளதாக அம்மாநில அரசாங்கம் கூறியது.

2,155 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கிருமித் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாதவர்களை 28 நாட்களுக்கு வீட்டிலேயே இருக்கும்படி கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா கிருமி தொற்றியுள்ளதா என்பதைக் கண்டறிய கேரளாவில் இதுவரை 140 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 46 பேருக்கு கிருமி தொற்றியிருக்கவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சியிருப்பவர்களின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.

கொரோனா கிருமித் தொற்று தொடர்பாக உதவி தேவைப்படுவோருக்காக 24 மணி நேர அவசர அழைப்பு தொலைபேசி எண்ணையும் கேரளா அமைத்துள்ளது. சீனாவின் ஹுபெய் மாநிலத்திலிருந்து

வந்த 600க்கும் மேற்பட்டோர் டெல்லி அருகில் இந்தியா ராணுவம் அமைத்த முகாமிலும் டெல்லியில் இந்திய-திபேத்திய எல்லைப் போலிசாரால் அமைக்கப்பட்ட முகாமிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

#இந்தியா#கேரளா#மாநிலப்பேரிடர்#கொரோனா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!