புதுடெல்லி: இரு தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், முந்தைய ஆண்டுடன் ஒப்பீட்டளவிலான எண்ணிக்கைகள் குறித்துப் பேசப்படவில்லை எனப் பொருளாதார நிபுணரும், மூத்த செய்தியாளருமான டி.என்.நினன் தெரிவித்திருக்கிறார்.
மேலும், செலவினங்கள் குறித்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து உரையாற்றினார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவரது உரையின் முதல் 2 மணிநேரம் 'புகை-கண்ணாடி' விளையாட்டாகவே இருந்தது எனலாம்.
"வருமான ரீதியிலான தொகையைப் பொறுத்தவரை, அவர்க ளுக்குத் தேவையான எந்த எண்களையும் அவர்களால் போட்டுக்கொள்ள முடியும். ஆனால் உண்மையில் அதில் எவ்வளவு தீவிரம் காட்டப்படுகிறது என்பது தெரியாது. ஆனால் அது தான் முக்கியம்," என்று டி.என் நினன் தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில் 2020 நிதிநிலை அறிக்கையானது நாட்டு மக்களுக்கு நல்ல செய்தி எதையும் சொல்லவில்லை எனவும் அறிக்கையில் பல முக்கிய விஷயங்கள் இடம் பெறவில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

