கவுஹாத்தி: ஆயில் இந்தியா நிறுவனத்தின் கச்சா எண்ணெய்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, புர்ஹி திஹிங் ஆறு தீப்பற்றி எரிவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அசாம் மாநிலம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள சிறிய ஆறுகளில் ஒன்று புர்ஹி திஹிங். இதன் அருகே ஏராளமான எண்ணெய்க் குழாய்கள் உள்ளன. மூன்று தினங்களுக்கு முன்பு எண்ணெய்க் குழாய் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு தீப்பற்றியது. பின்னர் அத்தீயானது, ஆற்றைச் சுற்றிலும் பரவி கொழுந்து விட்டு எரிவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இதையடுத்து தீயை அணைக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக ஆயில் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அசாமில் கொழுந்து விட்டு எரியும் சிறிய ஆறு
1 mins read

