போலிசார் போல் நடித்த கும்பல்

போலிசார் போல் நடித்த கும்பல்

1 mins read

ஓசூர்: காவல்துறை அதிகாரிகள் போல் வலம் வந்து, குறைந்த விலையில் தங்கம் தருவதாகக் கூறி மோசடி

செய்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஓசூர் போலிசாரிடம் சிக்கியது. தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரும், ஒடிசா மாநி லத்தைச் சேர்ந்த ஆடவரும் சேர்ந்து புதுக்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரை அணுகி, குறைந்த விலை யில் தங்கம் வாங்கித் தருவதாக ஆசை காட்டியுள்ளனர். ஆறு பேரும் போலிஸ் சீருடையில் இருந்ததை நம்பி ரூ.7.80 லட்சம் தொகையை கொடுத்துள்ளார் சுரேஷ்குமார். பிறகு அவர்கள் ஏமாற்றுவதை அறிந்து உண்மையான போலிசிடம் புகார் அளித்தார். இதையடுத்து ஓசூர் பகுதியில் பதுங்கி இருந்த மோசடிக் கும்பலைப் போலிசார் வளைத்துப் பிடித்தனர். இவர்களில் ஒரு நபர் மீது ஏற்கெனவே தமிழ கத்தில் போலிஸ் உயர் அதிகாரி, வருமான வரி அதிகாரி என்று கூறி ஏமாற்றிப் பணம் பறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.