புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு இம்மாதம் 23ஆம் தேதி இந்தியா வரவிருக்கிறார். அவரது பயணத்தின் நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையே புதிய வர்த்தக உடன்பாடுகள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உத்தேச உடன்பாடு குறித்து இரு நாட்டின் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். புதுடெல்லிக்கு வரும் அதிபர் டிரம்ப், மற்றொரு நகரத்துக்கும் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆக்ரா அல்லது அகமதாபாத்துக்கு அவர் பயணம் மேற்கொள்வது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
அமெரிக்க-இந்திய வர்த்தக உடன்பாடு விரைவில்
1 mins read

