மகாராஷ்டிராவில் 'பிளாஸ்டிக்' தடை

மகாராஷ்டிராவில் 'பிளாஸ்டிக்' தடை

1 mins read

மும்பை: மகாராஷ்டிராவில் 'பிளாஸ்டிக்' பொருட்களின் உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டிற்குத் தடை விதித்து கடந்த 2018ஆம் ஆண்டில் அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை முறையாக அமல்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்ய தாக்கரே தீவிரம் காட்டியுள்ளார்.

"ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தானவை. அதன் பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படும் மாசு கட்டுப்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்களுக்கு மே 1ஆம் தேதியிலிருந்து தடை விதிக்கப்படும்," என்று ஆதித்ய தாக்கரே சொன்னார்.