மனைவியின் முடியை வெட்டிய கணவரிடம் விசாரணை

மனைவியின் முடியை வெட்டிய கணவரிடம் விசாரணை

1 mins read

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனைவி அழகாக இருந்ததால் அவரது தலைமுடியை கணவர் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட் நகரைச் சேர்ந்த ஆரிஃப்புக்கும் ரோஷ்னிக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. ஆனால் அண்மைய காலமாக இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

மேலும் வெளிநபர்களுடன் ரோஷ்னிக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகித்ததால் கணவர் ஆரிஃப் அவருக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்தார்.

இதன் உச்சக்கட்டமாக மனைவி அழகாக இருப்பதை மற்றவர்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக அவரது தலைமுடியையும் அவர் வெட்டியுள்ளார். மேலும், மனைவியை ஒரு தனி அறையிலும் அவர் அடைத்து வைத்தார்.

செவ்வாய்க்கிழமை, தனது கணவர் வேலைக்குச் சென்ற பின்னர் வீட்டிலிருந்து தப்பிய ரோஷ்னி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து ஆரிஃப் மீது ேபாலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.