பெங்களூரு: பெங்களூரில், பூ வியாபாரம் செய்து வரும் ஒரு பெண்ணின் வங்கிக் கணக்கில் திடீரென 30 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணம் எப்படி வந்தது என்று வங்கி அதிகாரிகள், ரெகானா என்ற அந்தப் பெண்ணிடமும் அவரது கணவர் சையது மாலிக் புர்ஹான் என்பவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து சையது மாலிக் போலிசில் புகார் செய்துள்ளார். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

