பெங்களூரு: பெங்களூரில் உறவுக்காரப் பெண்ணைக் காரில் கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி இளைஞர் ஒருவர் தாலி கட்டினார். இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலிசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய இன்னொருவரை காவல்துறை தேடி வருகிறது.
சம்பந்தப்பட்ட நால்வரில் ஒருவர் கார் ஓட்டுநர், இன்னொருவர் ஓட்டுநருக்கு அருகே அமர்ந்து தாலி கட்டும் காட்சியைப் படம் பிடிக்க, பின் இருக்கையில் நடுவில் அமர்ந்திருந்த பெண்ணுக்கு வலது பக்கம் அமர்ந்திருந்தவர் தாலிகட்ட, அதைத் தடுக்க முயன்ற அப் பெண்ணிண் கைகளையும் தலையையும் இடது பக்கம் அமர்ந்த ஆடவர் பிடித்துக்கொண்டார்.

