பெங்களூரு: நித்தியானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன் என்பவர், பாலியல் வழக்கில் நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை ரத்துச்செய்ய கோரி மனு அளித்தார். இந்த வழக்கில் விளக்கம் அளிக்கும்படி நித்தியானந்தாவுக்கு உயர் நீதிமன்றம் கடிதம் அனுப்பியது. தலைமறைவாகியுள்ள நித்தியானந்தா, நீதிமன்றத்தின் கடிதத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர் ஆன்மிகப் பயணம் சென்றுள்ளதால் அவருடைய சீடரிடம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்து நித்தியானந்தாவின் பிணையை ரத்து செய்தார். எனவே அவர், எந்த நேரமும் கைதுசெய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
நித்தியானந்தாவின் பிணை ரத்து
1 mins read

