முன்னாள் முதல்வர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது

முன்னாள் முதல்வர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது

1 mins read

புதுடெல்லி: முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்து உள்ளதாக மூத்த காவல்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கண்டனம் தெரி வித்துள்ளார். "உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோருக்கு எதிரான பொதுப் பாதுகாப்புச் சட்டம் அதிர்ச்சியையும் பேரழி வையும் ஏற்படுத்தும். குற்றச்சாட்டுகள் இன்றி தடுத்து வைக்கப்படுவது என்பது ஜனநாயகத்தில் மிகமோசமானது, அருவருப் பானது என்றார் திரு சிதம்பரம்.