புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்று உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநர் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், விமானம் மற்றும் கப்பல் மூலம் சீனாவிலிருந்து வருபவர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நேப்பாளம், பூட்டான், பங்ளாதேஷ், மியன்மார் எல்லைகள் வழியாக இந்தியாவுக்குள் வர அனுமதி இல்லை என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனாவில் கொரோனா கிருமித் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை தற்போது 800ஐத் தாண்டியுள்ளது என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

