ரூ.540 கோடி செலவிலான கழிவறைகள் மாயம்; புகார்

ரூ.540 கோடி செலவிலான கழிவறைகள் மாயம்; புகார்

2 mins read

போபால்: ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது வட்ட கிணறு, வற்றாத கிணறு காணாமல் போய்விட்ட தாகவும் அதைக் கண்டுபிடித்து தரும்படியும் காவல்நிலையத்தில் புகார் அளிப்பார். அதுபோல் இப்போது மற்றொரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் ஒன்றிரண்டு கழிவறைகள் அல்ல; சுமார் 4.5 லட்சம் கழிவறைகளைக் காணவில்லை என்று மக்கள் பலரும் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகார்கள் அனைத்தும் உண்மைதான் என்பதும் 4.5 லட்சம் கழிவறைகளைக் கட்டுவதாகக் கூறி ரூ.540 கோடி பணம் சுருட்டப் பட்டிருப்பதும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கட்டிமுடிக்கப்பட்டதாகக் கூறப்படும் கழிவறைகளுக்கான ரூ.540 கோடி ரூபாய் நிதி எங்கு சென்றது என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட விசாரணையை அதிகாரிகள் விரைவில் முடுக்கிவிட உள்ளதாக வும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு வறு மைக்கோட்டிற்குக் கீழ் வாழும் 62 லட்சம் பேர் கழிவறை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் மத்திய அரசிடம் இருந்து ரூ.540 கோடி நிதியைப் பெற்று அவர்களுக்கு 4.5 லட்சம் கழிவறைகள் கட்டிக்கொடுக்கப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஸ்வாச் பாரத் திட்டத்தின் மத்தியப் பிரதேச துணை இயக்குநர் அஜித் திவாரி கூறுகையில், "மக்களுக்கு கட்டி வழங்கப்பட்ட கழிவறைகள் தொடர்பில் சுமார் 21,000 தன்னார்வ லர்களின் உதவியுடன் நேரில் ஆய்வு நடத்தினோம்.

"ஆய்வின்போது இந்த 4.5 லட்சம் கழிவறைகளும் உண்மை யாகவே கட்டிக் கொடுக்கப்படாமல் ரூ.540 கோடி பணம் சுருட்டப் பட்டிருப்பது தெரியவந்தது.

"புதிய கழிவறைகளுக்கு முன் மக்கள் நிற்கும் புகைப்படங்கள் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டிருந் தன. அவை அனைத்தும் போலி யானவை என்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

"இந்தப் புகைப்படங்கள் உண்மையில் வேறு இடங்களில் எடுக்கப்பட்டவையாக இருக்கலாம் என்றும் ஒருவேளை பக்கத்து வீடுகளில் எடுக்கப்பட்ட புகைப் படங்களாகவும் இருக்கலாம்," என்றும் அவர் கூறினார்.

கிராமவாசிகள் சிலர் தங்கள் பெயரில் கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளது தங்களுக்கே தெரியாது என்று பஞ்சாயத்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

நாடு முழுவதும் திறந்தவெளி கழிவறைகளை அகற்றும் நோக்கத் தோடு பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. .