புதுடெல்லி: 1 ரூபாய் நோட்டுகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வடிவமைப்புடன் கூடிய புதிய வண்ணங்களில் புழக்கத்தில் விட உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தப் புதிய ஒரு ரூபாய் நோட்டின் நிறம் இளஞ்சிவப்பு, பச்சை நிறம் கலந்ததாக இருக்கும். 15 இந்திய மொழிகளும் இடம் பெற்றிருக்கும். நோட்டின் எதிரெதிர் பக்கத்தில் 'இந்திய அரசு' என்ற சொற்களும் நிதி அமைச்சரின் செயலாளர் ஸ்ரீசுதானு சக்ரவர்த்தி யின் இருமொழி கையொப்பமும் இடம்பெற்றிருக்கும்.
இடமிருந்து வலமாக எண்கள் ஏறுவரிசையிலும் வலது புறத்தின் கீழ் எண் கறுப்பு நிறத்திலும் இருக்கும்.
இந்தப் புதிய நோட்டு விரைவில் புழக்கத்திற்கு வர உள்ளது.

