திருவனந்தபுரம்: பெற்றோரை முறையாக கவனித்துக் கொள்ளாத குற்றச்சாட்டின் பேரில், 15,650 பேர் மீது கேரள காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இவை அனைத்தும் கடந்த நான்கு ஆண்டுகளில் பதிவானவை. வயதான பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது வழக்குப் பதிவு செய்ய சட்டத்தில் இடம் உண்டு என கேரள சமூக நலத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.
இத்தகைய குற்றத்துக்காக பிள்ளைகளுக்கு மூன்று மாதம் வரை சிறைத் தண்டனையுடன், ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

