இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர் கைது

இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர் கைது

1 mins read

ராமேசுவரம்: ராமேசுவரம் தனுஷ்கோடி கடல் பகுதியில் நேற்று முன்தினம் உச்சிப்புளி பருந்து கடற்படை விமான தளத்தில் உள்ள இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் தீவிர சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு இருந்தபோது தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள 5வது மணல் திட்டு பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் பிளாஸ்டிக் படகு ஒன்று வந்தது. இதை ஹெலிகாப்டரில் இருந்த கடற்படையினர் கவனித்து அந்தப் படகை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து கடலோர போலிசாரும் அங்கு வந்து தயார் நிலையில் இருந்தனர். பின்னர் படகுடன் அந்த 3 பேரும் கடலோர போலிசிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலிசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்